குவாரியில் பாறை சரிந்து டிரைவர் பலி

2 months ago 13

கூடங்குளம்: நெல்லை மாவட்டம், கூடங்குளம், ராதாபுரம் அருகே இருக்கன்துறையில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு நேற்று மாலை இருக்கன்துறையைச் சேர்ந்த ராஜேஷ் (26) இட்டாச்சி இயந்திரம் மூலம் பாறைகளை வெட்டி லாரிகளில் ஏற்றி கொண்டு இருந்தார். நாகர்கோவில், நல்லகுமாரன்விளையை சேர்ந்த டிரைவர் அருண்குமார் (40), கற்களை ஏற்ற லாரியை ஆழமான பகுதிக்குள் ஓட்டியபோது திடீரென ராட்சத பாறைகள், லாரி மீது சரிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அருண்குமார் பலியானார். லேசான காயங்களுடன் ராஜேஷ் தப்பினார். தீயணைப்புத்துறை வீரர்கள் 2 மணி நேரம் போராடி அருண்குமார் சடலத்தை மீட்டனர். இதைதொடர்ந்து நெல்லை மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் பாலமுருகன் குவாரியில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் விதிமீறல்கள் தெரியவந்ததால் குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். அதன்படி குவாரி மூடப்பட்டது.

The post குவாரியில் பாறை சரிந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article