சென்னை: கல்குவாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வருக்கு சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானத் தொழில்களுக்கு நாள்தோறும் 10 ஆயிரம் லோடு மணல், எம்சாண்ட், கருங்கல் ஜல்லி தேவைப்படும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் நாள்தோறும் 3 ஆயிரம் லோடு தேவைப்படுகிறது. இந்நிலையில், கல்குவாரிகளில் கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைசீட்டுக்கு அரசுக்கு இதுவரை கனமீட்டர் அடிப்படையில் வரி செலுத்தப்பட்டது.