குழந்தைகள், முதியோர், மாற்றுதிறனாளிகள் இல்லங்கள்: ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்

2 months ago 10

திருவாரூர், நவ. 5: திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டவர்களின் இல்லங்களை நடத்தி வருபவர்கள் வரும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்துகொள்ளுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறும் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட வேண்டும் என இதன் வழி தெரிவிக்கப்படுகிறது.

இவ்வழிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலகங்கள், இணையதளங்களில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது. இத்தகைய இல்லங்கள், விடுதிகள், காப்பகங்கள் பதிவு செய்திட ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவே இறுதி எச்சரிக்கை என்பதையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யாத இல்லங்கள், விடுதிகள் காப்பகங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. விடுதிகள் மற்றும் இல்லங்களின் வகை, சம்மந்தப்பட்ட துறை, பதிவு மற்றும் உரிமம் பெறும் சட்டம் என பின்வரும் விபரங்கள் அளிக்கப்படுகிறது. குழந்தைகள் இல்லங்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள், இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015, முதியோர் இல்லங்கள், சமூக நலத்துறை, மூத்த குடிமக்களுக்கான சட்டம் 2007,

மனவளர்ச்சிகுன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளி நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், மனநல பாதுகாப்புச் சட்டம் 2017, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம் 2014, மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், மனநல பாதுகாப்புச் சட்டம் 2017.

இது நாள் வரை பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகள், காப்பகங்கள் முறையாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி மற்றும் அலுவலகம் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் இல்லங்கள் https://dsdcpimms.tn.gov.in அல்லது மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், முதியோர் இல்லங்கள் www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம், மனவளர்ச்சிகுன்றியவர்களுக்கான இல்லங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php அல்லது முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம் சென்னை அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் https://tnswp.com அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இதன்படி பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள், விடுதிகள், காப்பகங்கள் முதலானவை உடனடியாக மேற்காணும் இணையதளம் அல்லது அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். போட்டிகளில், வெற்றி பெரும் மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டியில், கலந்து கொள்வோர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றிதழ்களுடன் திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 10ந் தேதி காலை 9 மணிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post குழந்தைகள், முதியோர், மாற்றுதிறனாளிகள் இல்லங்கள்: ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article