குழந்தைகள் நலன் பேணுவோம்… வீட்டையும் நாட்டையும் காப்போம் : ஜி.கே.மணி வலியுறுத்தல்

2 hours ago 2

சென்னை : குழந்தைகளின் உரிமைகள், அரசின் கடமைகள். குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்டங்களும் திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது இந்தியாவில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். அதேபோல, ஐ.நா சபையால் ‘குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை, விழிப்பு உணர்வு மற்றும் அவர்களின் நலன்களை காப்பதற்காக, நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம் என அறிவிக்கப்பட்டு, கடந்த 70 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்கால சமூக வளமைக்கு இன்றைய குழந்தைகள்மீது கவனம் செலுத்துவோம்… எதிர்கால சமுதாயம் படைப்போம்.

குழந்தைகளின் உரிமைகள், அரசின் கடமைகள். குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்டங்களும் திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். அதோடு பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல் ல பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். ஐ.நா.சபை குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன் படிக்கையில் 196 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

The post குழந்தைகள் நலன் பேணுவோம்… வீட்டையும் நாட்டையும் காப்போம் : ஜி.கே.மணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article