குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்; இணையதளம் தொடங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 weeks ago 7

சென்னை,

தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின், "இன்று திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ் மொழி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்! https://t.co/ER7RlExYYu

— M.K.Stalin (@mkstalin) April 30, 2025
Read Entire Article