குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்போம் - டி.டி.வி.தினகரன்

7 months ago 22

சென்னை,

அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்து அவர்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை களையவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார்.

Read Entire Article