குளிர் காலத்தில்தான் நமது சருமத்தை நன்றாக பராமாிக்க வேண்டியது அவசியம். நமது முகத்தை மட்டுமல்ல நமது கைகள் மற்றும் பாதங்களையும் பராமாிக்க வேண்டும். கைகளையும் பாதங்களையும் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவற்றின் தோல்கள் வறண்டு அரிப்பு ஏற்படும். பின் சருமம் பொலிவை இழந்து வறண்டு காட்சியளிக்கும். இதற்கு வீட்டிலேயே செய்துகொள்ள சில அழகுக் குறிப்புகள் இதோ.
எண்ணெய்கள்
சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை சருமத்தின் இழந்த ஈரப்பதத்தை மீட்டு சருமத்தை வனப்புடன் வைத்திருக்கும்.
ஓட்ஸ் குளியல்
ஓட்ஸ் பால் அல்லது கிரீம்களை குளிக்கும்போது பயன்படுத்த இறந்த செல்களை நீக்கி புதிய சரும செல்கள் உருவாக வழி வகுக்கும். மேலும் இறந்த செல்களால் குளிர்காலத்தில் தோன்றும் வெள்ளை பேட்ச்களையும் நீக்கும்.
பால்
சருமத்தில் தடவுவதுடன் தினமும் ஒரு டம்ளர் பால் குளிர்கால உடல் மற்றும் சரும வறட்சியை நீக்கும். மேலும் பாலில் உள்ள பாஸ்போலிபிட் சரும செல்களுக்கு அவசியமான ஊட்டச்சத்துகளைக் கொடுப்பதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
தேன்
காயங்களை ஆற்றுதல், சருமத்தை பளிச்சென வைத்திருத்தல், ஈரப்பதம் என பல குணங்கள் தேனில் உள்ளன. தேன் மூலம் எவ்வித ஆரோக்கியப் பிரச்னையும் வராது என்பதால் நேரடியாகவே சருமத்தில் தடவலாம். வறட்சியால் உண்டாகும் சருமக் காயங்களைக் கூட தேன் சரி செய்துவிடும்.
கற்றாழை
வறண்ட சருமத்தின் வரப் பிரசாதம் கற்றாழை ஜெல். குறிப்பாக வறட்சியால் மூட்டு, கணுக்காலில் உள்ள பிரச்னைகளுக்கு கற்றாழை நல்ல மருந்து. மேலும் குளிர்கால தலைச்சரும வறட்சி அதனால் உண்டாகும் பொடுகு பிரச்னைக்கும் தீர்வு கொடுக்கும்.
பெட்ரோலியம் ஜெல்
வறட்சி மற்றும் குளிரால் உதட்டு வெடிப்பு, பாத வெடிப்பு, சருமக் காயங்களுக்கு உடனடி மருந்து பெட்ரோலியம் ஜெல். இதனை எப்போதும் வீட்டில் வைத்திருப்பது அவசியம்.
– ஷாலினி நியூட்டன்.
The post குளிர்கால வறட்சிக்கு என்ன செய்யலாம்? appeared first on Dinakaran.