குளித்தலை, ஜன.26: கரூர் மாவட்டம் குளித்தலை எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் எல்ஐசி முகவர்கள் பணி பாதுகாப்பு நாள் விழா மற்றும் சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முகவர் சங்க தலைவர் வல்லம் கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக செயலாளர் தேவேந்திரன் வரவேற்றார். மூத்த முகவர் அரிச்சந்திரன் சங்கக்கொடி ஏற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குளித்தலை கிளை மேலாளர் கீதா, முகவர்கள் களப்பணியாற்றி புது வணிகங்களை எத்தனையோ போட்டிகளுக்கு இடையே பொது மக்களை சந்தித்து புதிய பாலிசிகளை எடுத்து வருகின்றனர். இந்த செயல் மிகவும் பாராட்டக்கூடியது.
ஏனென்றால் இந்திய அளவில் நம்பிக்கை புதிய நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் முகவராக பணியாற்றுவது பாராட்டக்கூடியதாகும். வரும் காலங்களில் முகவர்கள் அதிகளவில் புது வணிகம் செய்து வாழ்வின் பொருளாதார முன்னேற்றமடைய வேண்டும் என வாழ்த்தினார். இதில் உதவி கிளை மேலாளர். லட்சுமி வளர்ச்சி அதிகாரி சஞ்சீவி குமார் நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஊழியர் சங்க செயலாளர் நாகநாதன் வாழ்த்துரை வழங்கினர். அலுவலர்கள் முகவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் சங்க பொருளாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.
The post குளித்தலையில் எல்ஐசி முகவர்கள் பணி பாதுகாப்பு விழா appeared first on Dinakaran.