குளித்தலை ஜன, 26: கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி உள்ளக புகார் குழு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு குழு மற்றும் இளைஞர் மேம்பாட்டு திட்டம் ஆகியன சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு 1700க்கும் மேற்பட்ட மாணவிகள் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த மாணவிகளுக்கான விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் பொ.அன்பரசு தலைமை வகித்தார். முன்னதாக புகார் குழு ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறை தலைவர் பேராசிரியர் உமாதேவி வரவேற்றார்.
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி பேசியதாவதுள் இன்றைய சூழலில் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் கைபேசிகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது பற்றியும் ஆபத்தான சூழ்நிலைகளை தாங்கள் எதிர்கொள்ளும்போது காவல்துறையின் உதவியை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியும் எடுத்துரைத்து பேசினார் இதனை அடுத்து குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை ஆலோசகர் சுஜாதா பால்வினை நோய்களினால் ஏற்படும் ஆபத்துகளையும் இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகளை பற்றியும் எடுத்து கூறினார்.
இதனை அடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் ஹில்டாதேன்மொழி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிறைவாக இளைஞர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மப்பிரியா நன்றியகூறினார். இதில் தமிழ் துறை தலைவர் ஜெகதீசன், உடற்கல்வி பொறுப்பு இயக்குனர் பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.