குளித்தலை சுங்ககேட் முதல் குறப்பாளையம் வரை புதிய பால கட்டுமான பணிகள் துவங்கியது: வாகன போக்குவரத்து மாற்றம்

20 hours ago 2

* மாற்று பாதை வரைபடம் வெளியீடு

குளித்தலை: குளித்தலை சுங்க கேட்டு முதல் குறப்பாளையம் வரை புதிய பாலங்கள் கட்டுமான பணி துவங்கியது. இதனால் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்று பாதை குறித்த வரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குளித்தலை நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட, நாகை கூடலுார் மைசூரு சாலையில், [குளித்தலை நகரப்பகுதி] நெடுஞ்சாலைத்துறை மூலம், பழைய பழுதடைந்த குறு பாலங்களுக்கு பதிலாக, புதிய பாலங்கள் கட்ட இருப்பதால், குளித்தலை சுங்ககேட் முதல், குறப்பாளையம் வரையி லான சாலை பணி தொடங்கி முதல் ஒரு மாதத் திற்கு மூடப்படுகிறது என்று கரூர் மாவட்டம் குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று முதல் நாள் பாலப்பணி தொடங்கியதால் சுங்க கேட் பகுதியில் கரூர் செல்லும் சாலை முற்றிலும் அடைக்கப்பட்டது.

இதனால் குளித்தலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அசோகன், குளித்தலை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் முருகானந்தம் ஆகியோர் போக்குவரத்து மாற்றம் குறித்து வரைபடத்துடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர் அதன்படி, உள்ளூர், வெளியூர் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணப்பாறையில் இருந்து குளித்தலை வழியாக கரூர் செல்லும் வாகனங்களும், துறையூர் முசிறியில் இருந்து குளித்தலை வழியாக கரூர் திருச்சி செல்லும் வாகனங்களும் , சுங்ககேட் நாபாளையம் வழியாக செல்லும் சாலையில் சென்று புறவழிச் சாலை வழியாக செல்ல வேண்டும். திருச்சியில் இருந்து மணப்பாறை, முசிறி செல்லும் வாகனங்கள் குமாரமங்கலம் பிரிவு ரோட்டில் இறங்கி குளித்தலை நகரம் வழியாக சுங்க கேட்டில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும்.

அதேபோல் கரூரிலிருந்து வரும் வாகனங்கள் புறவழிச் சாலை கலைமகள் பள்ளி பாலம் வழியாக பெரிய பாலம் சென்று குளித்தலை பஸ் நிலையம் சுங்கு கேட்டு வழியாக மணப்பாறை செல்ல வேண்டும். இதேபோல திருச்சியில் இருந்து கரூர் கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் குமாரமங்கலம் பிரிவு ரட்டில் இறங்கி குளித்தலை பஸ் நிலையம் வந்து மீண்டும் கலைமகள் பள்ளி வழியாக புறவழிச் சாலையை அடைந்து செல்ல வேண்டும். இதேபோல கரூரில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் கலைமகள் பள்ளி வழியாக பெரிய பாலம் குளித்தலை பஸ் நிலையம் வந்து மீண்டும் திருச்சியை நோக்கி செல்ல வேண்டும். அனைத்து பகுதியில் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் வெளியூர் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post குளித்தலை சுங்ககேட் முதல் குறப்பாளையம் வரை புதிய பால கட்டுமான பணிகள் துவங்கியது: வாகன போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article