குளச்சல் பகுதியில் போதையில் அதிக பாரம் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல்

1 month ago 4

குளச்சல் : குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தணகுமார் தலைமையில் சப் – இன்ஸ்பெக்டர்கள் சிதம்பர தாணு, சுரேஷ்குமார் உள்பட காவலர்கள் களியங்காடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது வள்ளியூர் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற மினி லாரியை தடுத்து சோதனை செய்தனர்.

வாகனத்தில் போக்குவரத்து விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த நபரை பரிசோதித்ததில் மது போதையில் இருந்தது பிரீத் அனலைசர் கருவி மூலம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விதியை மீறிய வாகனத்திற்கு அதிக பாரம் ஏற்றியதற்காக ரூ.28 ஆயிரம் அபராதமும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ. 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் மண்டைக்காடு பகுதியிலும் வாகன சோதனை நடந்தது. அதில் விதியை மீறி அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி அபாயகரமாக ஓட்டிவரப்பட்ட கேரள பதிவெண் கொண்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.44,500 அபராதம் விதிக்கப்பட்டு மாற்று வாகனம் கொண்டுவரப்பட்டு பாரத்தை குறைத்த பிறகு அபராத தொகையை இணையதளம் வாயிலாக செலுத்த வைக்கப்பட்ட பிறகு வாகனம் விடுவிக்கப்பட்டது.

இது குறித்து காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வாகன ஓட்டுதல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

The post குளச்சல் பகுதியில் போதையில் அதிக பாரம் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article