குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஏழை ஜோடிக்கு அரசு சார்பில் சீர்வரிசைகளுடன் திருமணம்

4 months ago 14

 

உடன்குடி.பிப்.17: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஏழை ஜோடிக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசைகள் வழங்கி இலவச திருமணம் நடந்தது.
ஆறுமுகநேரி அடுத்த முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜலட்சுமி- மூலக்கரையைச் சேர்ந்த கருப்பசாமி ஆகிய ஏழை ஜோடியினர் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலம் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் சார்பில் சீர்வரிசைகளுடன் இலவச திருமணத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து இவர்களுக்கான திருமணம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. தலைமை வகித்த யூனியன் முன்னாள் சேர்மன் பாலசிங் 4 கிராம் தங்கமாங்கல்யம், தம்பதியருக்கான புத்தாடைகள், பீரோ, கட்டில், மெத்தை, பாய், மிக்ஸி, 2தலையணகள், கைக்கடிகாரங்கள், பூஜை, பாத்திரங்கள் ஆகிய 12வகையான பொருட்களை வழங்கினார்.
நிகழ்வுக்கு கற்குவேல் அய்யனார்,கோயில் செயல்அலுவலர் காந்திமதி முன்னிலை வகித்தார். இதில் திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சுடலைக்கண், பிரபு, அறங்காவலர் மகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஏழை ஜோடிக்கு அரசு சார்பில் சீர்வரிசைகளுடன் திருமணம் appeared first on Dinakaran.

Read Entire Article