உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்காரம் வரும் 12ம்தேதி நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடக்கிறது. தசரா திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் ஏழாம்நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 4.30 மணிககு மகிசாசூரன் திருவீதியுலா, மாலை 4 மற்றும் 5 மணிகு சமயசொற்பொழிவு, 6 மணிக்கு பரதநாட்டியம், இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சி, 11.30 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் மகராஜன், ரவீந்திரகுமரன், கணேசன், வெங்கடேஷ்வரி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
The post குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: 7ம்நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்தநடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.