குலசேகரத்தில் பாதை தகராறில் தம்பி மனைவி மீது தாக்குதல் அதிமுக பிரமுகர் மீது வழக்கு

2 months ago 11

 

குலசேகரம், டிச.11: குலசேகரம் கூடை தூக்கி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி ஜெய்னி (35). இவர்களது வீட்டின் அருகே மணிகண்டனின் அண்ணன் ஜெயச்சந்திரன் (49) வசித்து வருகிறார். குலசேகரத்தில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராக இருந்த ஜெயச்சந்திரன் அதிமுக பிரமுகர் ஆவார். இந்தநிலையில் மணிகண்டனுக்கும், ஜெயச்சந்திரனுக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜெய்னி, தனது மகன் அருஷ், உறவினர் மேரி ஜாய் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே ஜெயச்சந்திரனும், நாகப்பள்ளிவிளையை சேர்ந்த குமார் (47) என்பவரும் ஒரே பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஜெயச்சந்திரன் ஜெய்னியை வழி மறித்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு ஜெய்னியை தாக்கி கீழே தள்ளினாராம்.

அப்போது குமார் கீழே விழுந்த ஜெய்னியை காலால் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெய்னி ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஜெய்னி அளித்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ஜெயச்சந்திரன், குமார் ஆகியோர் மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குலசேகரத்தில் பாதை தகராறில் தம்பி மனைவி மீது தாக்குதல் அதிமுக பிரமுகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article