குற்றாலம் மெயின் அருவியில் சற்று குறைந்த வெள்ளம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

6 months ago 24

தென்காசி,

கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக சீரிப்பாய்ந்தது. அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறைகள், மரக்கிளைகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டன. இதனால் மெயின் அருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள், தடுப்பு கம்பிகள் ஆகியவை சேதடமைந்தன.

இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு ஆண் யானையின் சடலம் அருவிக்கரையில் மீட்கப்பட்டது. இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் இன்றைய தினம் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் சற்று தணிந்துள்ளது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் குற்றால அருவியில் முகாமிட்டு சேதங்களை சரிசெய்யும் பணியை தொடங்கியுள்ளனர். அதே சமயம், குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மேலும் சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article