தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவியில் குளிக்க ஏற்கனவே அனுமதி அளித்த நிலையில் தற்போது மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க 4 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது.
The post குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.