
குற்றாலத்தில் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குற்றால சாரல் திருவிழா வருகிற 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக குற்றால சாரல் திருவிழா வருகிற 20-ம் தேதி தொடங்கும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக அவர் தெரிவித்ததாவது:-
குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையொட்டி, இந்த ஆண்டு சாரல் திருவிழா சனிக்கிழமை (ஜூலை 19) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக சாரல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. தொடா்ந்து 27-ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறும். அதேபோல, ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் மலா்க் கண்காட்சி ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.