குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

6 months ago 24

தென்காசி,

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவது உண்டு. இங்கு குற்றால சீசன் காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தின் நீர்வரத்து இருக்கும் போது, பொதுமக்கள் இங்கு மகிழ்ச்சியாக குளித்து செல்வர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Read Entire Article