குறைந்தபட்ச பாதுகாப்பை கூட தர மறுப்பு: கனடாவில் இந்திய தூதரக நிகழ்ச்சிகள் ரத்து

1 week ago 3


டொரான்டோ: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு ஜூன் மாதம் கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கொலைக்கு இந்தியா மீது கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதால் இந்தியா – கனடா உறவில் சிக்கல் நீடிக்கிறது. அண்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள இந்து சபை கோயில் மற்றும் இந்திய தூதரகம் இணைந்து அங்குள்ள இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாம் நடந்து கொண்டிருந்தபோது கோயிலின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய காலிஸ்தான் பிரிவினைவாதிகள், பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் டொரான்டோ உள்ளிட்ட சில நகரங்களில் இந்திய தூதரகம் நேற்று நடத்த இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில், “இந்திய தூதகரம் நடத்த திட்டமிட்டிருந்த முகாம் நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்க கூட கனடா அரசு மறுத்து விட்டது. இதனால் பாதுகாப்பு கருதி இந்திய தூதரகம் நடத்த இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்துக்கு தடை: ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பேட்டியை ஔிபரப்பிய ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு கனடா தடை விதித்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியா சென்ற ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வௌியுறவு அமைச்சர் பென்னி வோங்குடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெய்சங்கரிடம் இந்தியா – கனடா உறவு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நிஜ்ஜார் கொலை வழக்கில் எந்தவித ஆதாரமுமின்றி இந்தியா மீது கனடா பொய் குற்றம்சாட்டி வருகிறது” என்று தெரிவித்தார். இந்த பேட்டியை ஔிபரப்பு செய்த சமூக ஊடகத்துக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post குறைந்தபட்ச பாதுகாப்பை கூட தர மறுப்பு: கனடாவில் இந்திய தூதரக நிகழ்ச்சிகள் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article