குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

1 month ago 5

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்' சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடந்துள்ளதுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், "குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டு வர முடியும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் என்று கூறியிருந்தீர்கள். அப்படி பார்த்தால் 400 நாட்கள் நடந்திருக்க வேண்டும்; ஆனால் 119 நாட்கள் தான் நடந்துள்ளது" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Read Entire Article