குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 500 மனுக்கள் பெறப்பட்டன: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைக்கிறார்

1 month ago 10

 

திருப்பூர், அக். 1: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 500 மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர். (தேர்தல்) ஜெயராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 500 மனுக்கள் பெறப்பட்டன: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article