குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

4 hours ago 2

சென்னை: பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வழக்கம் போல ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களிடையே இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகம் தண்ணீர் வழங்க மறுக்கும் சூழலில் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு குறுவை பருவ சாகுபடியை நிறைவு செய்ய முடியுமா என்ற ஐயமும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் மத்தியில் நிலவும் ஐயங்கள் போக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்பட வேண்டும். இவை தொடர்பாக காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக மே மாதத்தின் முதல் பாதியில் உழவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

The post குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article