
சென்னை,
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். வரும் 12ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கபட்டு இருந்தது.
தமிழக அரசில் இருக்கும் பல்வேறு பதவிகளில் குரூப் 4 தேர்வு அதிக பேர் எழுதும் தேர்வாக உள்ளது. ஒரே கட்ட தேர்வு, 10-ம் வகுப்பு தகுதி போதும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை லட்சக்கணக்கில் எழுதி வருகின்றனர்.