குரூப் 2, 2 ஏ பணிகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்: செப்டம்பர் 28ம் தேதி முதல் நிலை தேர்வு

7 hours ago 4

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பயணியிடங்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகிறது. ஜூலை 12ம் தேதி குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில் சார்பதிவாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 2, 2ஏ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு மொத்தம் 645 பணயிடங்கள் காலியாக உள்ளது. இதில் குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28-ந்தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை மூன்று கட்டங்களாக இருக்கும். முதல் நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam), மற்றும் நேர்காணல் (எந்தப் பதவிக்கு பொருந்துமோ அங்கு) என்பது குறிப்பிடத்தக்கது.

The post குரூப் 2, 2 ஏ பணிகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்: செப்டம்பர் 28ம் தேதி முதல் நிலை தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article