கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு வாரணாசி, அயோத்தி செல்லும் அகாடா துறவிகள்

2 hours ago 1

புதுடெல்லி: மகா கும்​பமேளா​வில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு அகாடா துறவி​களில் பலரும் வாராணசி, அயோத்​திக்கு செல்​கின்​றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜில் மகா கும்​பமேளா விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்​கியது. இதில் மகர சங்க​ராந்தி, மகா பவுர்​ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்​திரி என மொத்தம் 6 வகையான ராஜ குளியல் நிகழ்ச்சி இடம்​பெறுகிறது. இவற்றில் 5வது புனித குளியல் கடந்த 3ம் தேதி வசந்த் பஞ்சமி​யில் முடிந்​தது. இதையடுத்து மகா கும்​பமேளா​வில் உள்ள அகாடாக்களில் பறக்​கும் தங்கள் ஆன்மிக காவி கொடிகளின் உயரத்தை துறவிகள் குறைத்து​ விட்​டனர். மொத்தமுள்ள 13 அகாடாக்​களில் 3 முக்​கிய பிரிவுகள் உள்ளன. அதாவது, சைவர்கள் 7, வைராகிகள் மற்றும் உதாசிகள் தலா 3 அகாடாக்கள் உள்ளன. சைவர்​களின் 7 அகாடா துறவிகள் வாரணாசி சென்று காசி விஸ்​வநாதரை தரிசிக்க உள்ளனர். இவர்கள் காசி​யில் வரும் 26ம் தேதி மகா சிவராத்​திரி அன்று மாபெரும் ஊர்வலம் நடத்து​கின்​றனர்.

இவர்​களில் சில அகாடா​வினர், 15ம் தேதி ஹரித்துவாரில் சிவனை தரிசிக்க செல்​கின்​றனர். ​பின்னர் ஹோலி பண்டிகையை கொண்​டாடி​விட்டு துறவிகள், தங்கள் முகாம்​களுக்கு திரும்​புவார்​கள். அயோத்தி ராமர் கோயிலுக்கு உதாசி மற்றும் சில வைஷ்ணவ அகாடாக்​களின் துறவிகள் செல்​வார்​கள். மகா சிவராத்​திரிக்கு பிறகே கும்பமேளா நிறைவடை​யும். இந்நாளில் வரும் ராஜ குளியலுக்கு அதிக எண்ணிக்கை​யில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது. இதனிடையே, அகாடாக்​களுக்கு 7ம் தேதி புதிய தலைவர்கள் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். அன்றயை தினமே அகாடாக்கள் நிர்​வகிக்​கும் கோயில்​களுக்கான மஹந்த் எனும் தலைமை பண்டிதர்​களும் தேர்வு செய்யப்படுவார்​கள். அதற்கு பிறகு ஐதீக முறைப்​படி, கடி, பகோடி (மோர்​ குழம்பு மற்றும் பகோடா) சமைத்து உண்ட பின் பிரயாக்​ராஜில் இருந்து சென்று விடு​வார்​கள்.

 

The post கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு வாரணாசி, அயோத்தி செல்லும் அகாடா துறவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article