புதுடெல்லி: மாநிலங்களவையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் கார்கே, ‘‘மகா கும்பமேளாவின்போது உயிரிழந்த மக்களுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கும்பமேளாவில் இறந்த ஆயிரக்கணக்கானோருக்கு. இது எனது மதிப்பீடு தான். ஆனால் எனது மதிப்பீடு சரியில்லை என்றால் அரசு சரியான புள்ளி விவரங்களை வழங்க வேண்டும்.
உண்மையாக எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் கூறியது தவறாக இருந்தால் அதனை திருத்திக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றார். மாநிலங்களவை தலைவர் கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவை தலைவர் ஜக்தீன் தன்கார் பேசுகையில், ‘‘ முரண்பட்ட செய்தியாக இருந்தாலும் உலகம் முழுவதற்கும் செல்கிறது. உங்களால் அந்த அளவுக்கு போகமுடியுமா? உங்களது அறிக்கையை நீங்கள் திரும்ப பெற வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த கார்கே நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் குறிப்பிடவில்லை. அரசு சரியான புள்ளிவிவரங்களை வழங்கவேண்டும் என்றார்.
The post கும்பமேளாவில் இறந்த ஆயிரக்கணக்கானோருக்கு அஞ்சலி: கார்கே பேச்சால் மாநிலங்களவையில் அமளி appeared first on Dinakaran.