கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

2 days ago 3

சென்னை,

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை. அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. மதுரை மல்லி, காஞ்சீபுரம் பட்டு ஆகியவற்றை உதாரணமாக சொல்ல முடியும்.

அதனை அவ்வளவு எளிதில் பெற்றுவிட முடியாது. அந்த பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்களை ஆவணங்களாக சேகரித்து மத்திய அரசிடம் விண்ணப்பித்து, அவர்களும் அதனை ஆராய்ந்து அதற்கான குறியீட்டை வழங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறது.

இந்த நிலையில், கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read Entire Article