கும்பகோணத்தில் 2004-ல் தீ விபத்து நேரிட்ட பள்ளிக் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்காமல், அக்கட்டிடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தீ விபத்தில் குழந்தையை பறிகொடுத்த ஒருவரான மகேஷ் உள்ளிட்டோர் கும்பகோணம் மாநகராட்சி மேயர், ஆணையர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் நேற்று அளித்த கோரிக்கை மனு: கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள பள்ளியில் 2004, ஜூலை 16-ம் தேதி நேரிட்ட தீ விபத்தில் குழந்தைகள் 94 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.