குமாரபாளையம், மே 14: குமாரபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், நகர்மன்ற அவசர கூட்டம், நகர்மன்ற தலைவர் விஜயகண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் வெங்கடேசன், நகராட்சி கமிஷனர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தபுள்ளி வழங்கிய நிறுவனங்களுக்கு, ஒப்புதல் வழங்கும் தீர்மானம் குறித்த விவாதம் நடைபெற்றது. நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தினசரி சேகரித்து, தரம் பிரித்து அவற்றை அப்புறப்படுத்தி, உரமாக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கிய 2 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளி பரிசீலிக்கப்பட்டது. இதில் டன் ஒன்றுக்கு ரூ.4,428 கேட்டு வரப்பெற்ற சென்னை நிறுவனத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post குமாரபாளையம் நகர்மன்ற கூட்டம் appeared first on Dinakaran.