நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். கடந்த 11 மாதங்களில் பான்மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 304 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மற்றும் அண்ணா பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.