குமரி மேற்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் திமுகவினர் கள ஆய்வு

2 months ago 10

 

தக்கலை, நவ.18: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வரும் நிலையில் திமுக.,வினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.  தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடந்துவருகிறது. வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இப்பணியினை தேர்தல் கமிஷன் துரிதப்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திமுக சார்பில் பாக முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இடம் பெற செய்து வருகின்றனர்.

குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள திமுக ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாக முகவர்களுடன் இணைந்து பணியை துரிதப்படுத்தி புதிய வாக்காளர்கள் எவரும் விடுபடாத வகையில் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் அறிவுறுத்தினார். இதன் பேரில் திமுகவினர் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட தக்கலை வடக்கு ஒன்றியத்தில் இப்பணிகளை ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ் தலைமையிலான குழுவினர் வாக்குச்சாவடி வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு பாக முகவர்களுக்கு உதவினர். திக்கணங்கோடு ஊராட்சி புதூர் வாக்குச்சாவடியில் மேற்கொண்ட ஆய்வின் போது ஊராட்சி துணை தலைவர் ஜாண்பீட்டர், முன்னாள் துணை தலைவர் காசிலிங்கம் பங்கேற்றனர். இது போன்று ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் ஆய்வுப்பணி நடைபெற்றது.

The post குமரி மேற்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் திமுகவினர் கள ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article