நாகர்கோவில், ஏப்.29: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்திருந்தது. நேற்று காலை வரை அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 38.4 மி.மீ மழை பெய்திருந்தது. பூதப்பாண்டி 4.2, அடையாமடை 6.2, சிற்றார்-1ல் 15.6, பெருஞ்சாணி 21.8, புத்தன் அணை 20.2, திற்பரப்பு 27.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 32.09 அடியாகும். அணைக்கு 166 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 32 அடியாகும். அணைக்கு 148 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 3.08 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 12 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 3.18 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 14.9, மாம்பழத்துறையாறு அணையில் 21.16 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது. முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 6.9 அடியாகும்.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 13 முதல் 16 வினாடிகளுக்கு ஒருமுறை 1 முதல் 1.1 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. 29ம் தேதி வரை இந்த நிலை காணப்படும் என்றும் இந்திய கடல்சார் சேவை மையம் அறிவித்துள்ளது.
The post குமரி மாவட்டத்தில் கோடை மழை நீடிப்பு appeared first on Dinakaran.