குமரபேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

2 months ago 11

 

ஊத்துக்கோட்டை, நவ. 5: திருவள்ளூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் எல்லாபுரம் ஒன்றியம், குமரபேட்டை ஊராட்சியில் ரூ.31.46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், குமரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசலு(எ)பாபு தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி, பிடிஒ சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், வக்கில் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் நரசிம்மன், துணைத்தலைவர் நாகபூணம் வீரபத்திரம் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் டிகே.முனிவேல், சங்கர், கரிகாளன், கார்த்திகேயன், அப்புனு, ராஜா, சிவாஜி, ரமேஷ், சுமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், ஊராட்சி செயலாளர் சோபன்பாபு நன்றி கூறினார்.

The post குமரபேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article