'குபேரா' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய துல்கர் சல்மான்

2 weeks ago 5

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் குபேரா படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். அதாவது, தனது தயாரிப்பு நிறுவனமான 'வே பாரர் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் இந்த படத்தினை கேரளாவில் வெளியிடுகிறது. மேலும் துல்கர் சல்மான் தனது தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பில் உருவாகி வரும் 'யோகா சாப்டர் ஒன் சந்திரா' என்ற படத்தை தயாரிப்பு வருகிறார்.

Read Entire Article