குன்னூர்: குன்னூரில் மழையின் காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதேபோன்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவை நேற்று மற்றும் இன்று, 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
தற்போது, ரன்னிமேடு ஹில்குரோவ், ஆடர்லி போன்ற பகுதிகளில் மலை ரயிலில் குப்பட்டா எடுத்து வரப்பட்டு தற்போது தண்டவாளத்தில் விழுந்த மரங்கள், பாறை மற்றும் மண் களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் முடிவடைந்து, நாளையிலிருந்து வழக்கம் போல் மலை ரயில் இயங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.