குன்னூர் : குன்னூர் கோட்டத்தில், மின் நுகர்வோருக்கான சிறப்பு முகாமில் மின் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே இடத்தில் மனுக்கள் பெறப்பட்டது. இதில், மின்கட்டணம், மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து மின் வாரியம் தொடர்பாக மின்கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்னைகளின் தீர்வுக்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோரிடமிருந்து பெறப்படும் மின்சார தொடர்பான புகார்கள் அனைத்தையும் உடனடியாக துரிதமாக சரி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் கோட்டத்திற்குட்பட்ட சிம்ஸ்பார்க் மின்வாரிய அலுவலகத்தில் மின்சார வாரியம் சார்பில் நேற்று முன்தினம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க இந்த முகாம் உதவி வரும் நிலையில் மின்கட்டணம், மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி கூறுகையில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மின்சாரம் தொடர்பான பல புகார்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மின்கட்டணம், மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பிரச்னைகளை தீர்க்க மின்வாரியம் விரைவில் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
முகாமில் குன்னூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி மின்பொறியாளர்கள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர். இம்முகாம் சிறப்பாக நடந்து முடிந்ததையொட்டி இறுதியில் உதவி மின் பொறியாளர் ஜான்சன் நன்றி தெரிவித்தார்.
The post குன்னூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் உடனடி தீர்வு appeared first on Dinakaran.