குன்னூர் காட்டேரி பூங்காவில் ‘லிம்னியாஸ்’ பட்டாம் பூச்சிகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

3 months ago 18

ஊட்டி: குன்னூர் காட்டேரி பூங்கா பகுதியில் ‘லிம்னியாஸ்’ என்று அழைக்கப்டும் பட்டாம் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது பட்டாம் பூச்சிகளின் சீசன் துவங்கி உள்ளது. சமவெளிப் பகுதிகளில் தற்போது உஷ்ணம் அதிகரிக்க துவங்கி விட்டது. இதன் காரணமாக, மலைப்பகுதிகளை தேடி பட்டாம் பூச்சிகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குன்னூரில் தற்போது அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக உள்ளது. இதனால், இந்த சீதோஷ்ண நிலை பட்டாம் பூச்சிகளுக்கு ஏற்றதாக உள்ளது.

தற்போது, குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் 20 வகையான பட்டாம் பூச்சிகள் வருகை தந்துள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில், ‘நீலப்புலி என அழைக்கப்படும் திருமலை லிம்னியாஸ்’ பட்டாம் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் காட்டேரி பூங்கா பகுதிகளில் காணப்படுகிறது. இவைகள் அங்குள்ள செடிகளில், பூக்களில் அமர்ந்தும், பறந்துக் கொண்டும் உள்ளன. இந்த பட்டாம் பூச்சி கூட்டத்தை ‘போட்டோ’ எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த பட்டாம் பூச்சிகள் பெரிதாகவும், பறந்த விரிந்த இறக்கைகள் கொண்டுள்ளது. 90 முதல் 100 மில்லி மீட்டர் அளவு வரை இறக்கைகள் கொண்டது, ஆண் பட்டாம் பூச்சிகள் பெண் பட்டாம் பூச்சிகளைவிட சிறியதாக உள்ளது. இறக்கையின் மேல் பக்கம் அடர் பழுப்பு முதல் கருப்பு வரை மற்றும் நீல, வெள்ளை புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் அழகாக காணப்படுகிறது.

The post குன்னூர் காட்டேரி பூங்காவில் ‘லிம்னியாஸ்’ பட்டாம் பூச்சிகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article