குன்னூர் அருகே ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் அபாய பயணம்

3 weeks ago 5

*சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

குன்னூர் : குன்னூர் அருகே கொட்டும் மழையில் ஆபத்தை உணராமல், சரக்கு வாகனத்தில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், பட்டா மற்றும் வருவாய் நிலங்களில் சில்வர் ஓக் மரங்கள் வெட்ட, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் இருந்து அனுமதி பெறவேண்டும். சில இடங்களில் உரிய அனுமதி பெறாமல், விவசாயிகளிடம் இருந்து, மிகவும் குறைவான விலைக்கு வாங்கப்படும் சில்வர் ஓக் மரங்கள், அதிக விலைக்கு மில்களில் விற்கப்படுகிறது.

அதேபோல, மேலும் சில இடங்களிலும் பட்டா இடத்திற்கு அனுமதி வாங்கிக்கொண்டு, அருகில், அரசுக்கு சொந்தமான ஓரிரு மரங்களையும் வெட்டி செல்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மர வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பை ஒப்பந்ததாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஆனால் சில நேரங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் குன்னூர் அருகே அதிகரட்டி பகுதியில் இருந்து, குந்தா வனசரக அலுவலகத்தில் அனுமதி பெற்றதாக கூறி, சரக்கு வாகனத்தில் அதிக சுமையுடன் குன்னகொம்பை பகுதியை நோக்கி வந்தது.

இதில் கொட்டும் மழையில் ஆபத்து விளைவிக்கும் வகையில், மரத்தொழில் செய்யும் தொழிலாளர்களை ஏற்றி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் அருகே ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் அபாய பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article