ஊட்டி,ஜன.11: தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்கிணங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதியின் அறிவுறுத்தலின் படி குன்னூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மேகலா மைதிலி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அந்தோணியார் மேல்நிலைபள்ளி அருகே துவங்கிய பேரணி, சிம்ஸ் பூங்கா அருகே நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற மாணவர்கள் சாலை விதிமுறைகள் குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்தனர். சாலை விதிமுறைகள் குறித்தும், அவர்களை தவறாமல் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் மற்றும் விைரவு நீதிமன்ற நீதிபதி கீதா,போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post குன்னூரில் சாலை பாதுகாப்பு குறித்த பேரணி appeared first on Dinakaran.