குன்னூர்: வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கும் நேரத்தில், பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வது வழக்கம். அதன்படி, தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக உள்ளது. இந்த சீதோஷ்ண நிலை, பட்டாம்பூச்சிகளுக்கு ஏற்றதாகும். குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் தற்போது 20 வகையான பட்டாம்பூச்சிகள் வருகை தந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.