குன்னூரில் கனமழை: தடுப்பு சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் அடுக்குமாடி வீடு

1 month ago 9


ஊட்டி: குன்னூரில் நேற்று பெய்த கனமழையால் தடுப்புசுவர் இடிந்து அந்தரத்தில் அடுக்குமாடி வீடு தொங்கிக் கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான அருவங்காடு, பர்லியார், காட்டேரி போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மேல்குன்னூர் பகுதியில் பல மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகே சந்தோஷ் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தனியார் குடியிருப்பு தடுப்புசுவர் இடிந்து சமையலறைக்குள் விழுந்தது.

இதனை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அதன் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அந்தரத்தில் தொங்கியப்படி உள்ளதால், எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் ஆபத்தான இடங்களை ஆய்வு செய்து, முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூரில் கனமழை: தடுப்பு சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் அடுக்குமாடி வீடு appeared first on Dinakaran.

Read Entire Article