குன்னூரில் கடும் மேகமூட்டம் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க திணறல்

3 months ago 17

 

ஊட்டி, அக்.19: குன்னூரில் கடும் மேகமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிருடன் மேக மூட்டமும் நிலவி வருகிறது. இந்நிலையில் குன்னூரில் சுற்றுலா தலங்களான லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் மற்றும் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது கடும் மேகமூட்டம் நிலவி வருகிறது.

இதனால், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு உள்ளது. கடும் மேக மூட்டம் காரணமாக வாகன ஓட்டுநர்கள் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு கடும் சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்கி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் மேக மூட்டத்திற்கிடையே வாகனங்களை இயக்க தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post குன்னூரில் கடும் மேகமூட்டம் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க திணறல் appeared first on Dinakaran.

Read Entire Article