குத்தாலம்,டிச.17: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பணிபுரியும் சுகாதார ஊக்குநர்கள் மற்றும் தூய்மைக்காவலர்களுக்கு சுகாதாரம் தொடர்பான பயிற்சி கூட்டம் மேக்கிரிமங்கலம் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி கூட்டமானது வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சோபனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை கூடுதல் கலெக்டர் முகமதுசபீர்ஆலம் முன்னிலை வகித்தார்.
இப்பயிற்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், சுகாதாரம், சுகாதார ஊக்குநர்கள் மற்றும் தூய்மைக்காவலர்களுக்கான பணிகள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. இதில் சிறப்பாக பணியாற்றிய திருவாவடுதுறை ஊராட்சியைச் சேர்ந்த தூய்மைக்காவலர்களுக்கு, கூடுதல் கலெக்டர் பொன்னாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. மேலும், தூய்மைக்காவலர்கள் தங்களது பணியினை சிறப்பாக செயல்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சிக்கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், சுகாதார ஊக்குநர்கள் மற்றும் தூய்மைக்காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post குத்தாலம் வட்டாரத்தில் தூய்மைக்காவலர்களுக்கு சுகாதாரம் தொடர்பான பயிற்சி கூட்டம் appeared first on Dinakaran.