குட்டி காஷ்மீராக மாறிய ஊட்டி.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனியால் மீண்டும் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு..!!

1 day ago 1

நீலகிரி: உதகையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனியின் தாக்கத்தால் மீண்டும் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை உறைப்பனி காலமாகும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவுடன் துவங்கும், பின்னர் உறைபனிப் பொழிவாக காணப்படும். இந்த சமயத்தில் அப்பகுதியில் கடும் குளிர் நிலவும். இந்நிலையில் நவம்பரில் துவங்க வேண்டிய உறைபனிப் பொழிவு டிசம்பர் இறுதியில் துவங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக உறைபனிப் பொழிவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில், உதகையில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல பகுதிகள் காஷ்மீர் போலவே காட்சியளிக்கின்றன. உதகை நகரில் உள்ள குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம், தலைகுந்தா தாவரவியல் பூங்கா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிக்கிடந்த உறைபனியால் பச்சை பசேல் என காட்சியளிக்கும் புற்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் வெண்மையாக காணப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட கார்களின் மீது உறைபனி கொட்டிக்கிடந்ததால் கார்கள் வெள்ளை நிறமாக காட்சியளிக்கின்றனர். இருசக்கர வாகனங்கள் மீதும் உறைபனி கொட்டிக் கிடக்கின்றன. இதன் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக பதிவாகியது.

The post குட்டி காஷ்மீராக மாறிய ஊட்டி.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனியால் மீண்டும் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article