'குட் பேட் அக்லி' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்

1 week ago 8

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இதில் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை டிக்கெட் முன்பதிவில் மட்டும் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படம் மொத்தமாக 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

It's U/A for GBU.ENJOY THE VERA LEVEL ENTERTAINMENT WITH YOUR FRIENDS AND FAMILY #GoodBadUgly Grand release worldwide on April 10th, 2025 ❤▶️ https://t.co/Vm3d905ja4Book your tickets now!️ https://t.co/jRftZ6uRU5#AjithKumar @trishtrashers @MythriOfficialpic.twitter.com/ENTcCYSAwZ

— Mythri Movie Makers (@MythriOfficial) April 8, 2025
Read Entire Article