பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் ஊராட்சி, அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள குடோனில் தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, சாக்கு மூட்டையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், அங்கிருந்தவரை, போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ரவி (61) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 95 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ரவியை வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வாலிபர் கைது: திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, ஆந்திர எல்லை பகுதியில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் நேற்று போலீசார், ஆந்திராவிலிருந்து வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சோதனை செய்தனர். இதில், திருப்பதியிலிருந்து திருத்தணி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து சீட்டின் அடியில் வைத்திருந்த பையினை சோதனையிட்டதில் குட்கா, புகையிலை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், அதனை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பட்டுராஜ் (37) என்பவரை கைது செய்தனர்.
The post குடோனில் குட்கா பதுக்கியவர் கைது: 95 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.