'குடும்பஸ்தன்' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்

3 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில், குடும்பஸ்தன் திரைப்படம் 20 நாட்களில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல நடிகர் கமல்ஹாசன் குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் இப்படம் 28-ந் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

When team #Kudumbasthan met #Ulaganayagan @ikamalhaasan sir ❤️Our entire team is overwhelmed with your words of appreciation sir @Cinemakaaranoff @Manikabali87 @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @VaisaghOfficial @prasannaba80053 pic.twitter.com/MqfaFHx8gP

— Cinemakaaran (@Cinemakaaranoff) February 12, 2025
Read Entire Article