
சென்னை,
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
விஜய் இனி தளபதி இல்லை-வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம்.அரசியலுக்காக வருமானத்தை விட்டவர் விஜய். உங்கள் அரசியல் சம்பாதிக்கும் அரசியல். நாங்கள் ஊழல் செய்து லண்டன் சென்று ஊழல் பணத்தை செலவு செய்யவில்லை.
எம்.ஜி.ஆரை இழிவு செய்ததால்தான் அவரது ஆட்சியில் நீங்கள் வொர்க் பிரம் ஹோமில் இருந்தீர்கள். திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஓய்வுக்கு தயராக வேண்டும். பிரசாத் கிஷோர் வருகை தொடர்பாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. திமுகவிற்காக வேலை பார்க்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். தேர்தல் வியூக நிறுவனங்கள் மூலம் திமுக எதிர்க்கட்சிகளை உடைப்பது குறித்து பல்வேறு வியூகங்களை வகுக்கிறார்கள். தவெகவில் சாதி இல்லை. ஆனால், திமுகவில் சாதி உள்ளது. அரசியலில் சாதி என்பதை உருவாக்கியதே திமுகதான். சட்டசபையில் ஜனநாயகம் இல்லை. சட்டசபையில் திமுக கூட்டணி எம்.எல்.ஏ பேசினால் கூட காட்டுவது இல்லை. 10 மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்றுகிறார்கள்"இவ்வாறு அவர் பேசினார்.