மூணாறு: மூணாறு அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதால் மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் தேயிலை தோட்டம் அதிகளவில் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். வனப்பகுதியில் திரியும் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் அடிக்கடி தேயிலை தோட்ட பகுதிகளுக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து முகாமிடுகின்றன.
மூணாறு அருகே உள்ள லாக்காடு எஸ்டேட் பகுதியில், குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் கடந்த 2 நாட்களாக உலா வருகின்றன. இவைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்றிரவு எஸ்டேட் பங்களாவிற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம், அங்கு அமைக்கப்பட்டு உள்ள ஷெட்டை சேதப்படுத்தியது. ‘‘யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குடியிருப்பில் காட்டு யானை உலா: மூணாறு அருகே மக்கள் பீதி appeared first on Dinakaran.