குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வந்த 3 அரியவகை ஆந்தைகள் மீட்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு

2 weeks ago 3

குடியாத்தம், ஜன.22: குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நேற்று மதியம் 3 அரியவகை ஆந்தைகள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த 3 அரிய வகை ஆந்தைகளை காக்கைகள் மற்றும் நாய்கள் துரத்தியது. இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 அரியவகை ஆந்தைகளை பத்திரமாக மீட்டு குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குடியிருப்பு பகுதிக்குள் வந்த அரிய வகை ஆந்தைகளால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

The post குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வந்த 3 அரியவகை ஆந்தைகள் மீட்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article